பெரும்புதூர், டிச.5: பெஞ்சல் புயல் மழையால் சேதமான குன்றத்தூர் சலை சீரமைக்கம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பெரும்புதூர்-குன்றத்தூர் சாலை உள்ளது. பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலை வாகனங்கள் குன்றத்தூர் வழியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கார், வேன், அரசு பேருந்து, லாரி உள்ளிட்ட பெரும்பாலான கனரக வாகனங்கள் பெரும்புதூர்-குன்றத்தூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், இந்த சாலையின் இடையே உள்ள அமரம்பேடு, பென்னலூர் கூட்டு சாலை, காட்டரம்பாக்கம் கூட்டு சாலை ஆகிய பகுதியில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, பெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று பெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் சேதமான பகுதிகளில் சீரமைக்கும் பணியினை செய்து வருகின்றனர்.
The post மழையால் சேதமான குன்றத்தூர் சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.