இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்

தேன்கனிக்கோட்டை, டிச.5: தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மழை பெய்தது. அப்போது, தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அனுமந்தபுரம் ஊராட்சி, சித்தலிங்கன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஒரு பக்க சுற்றுச்சுவர் மழையில் இடிந்து விழுந்தது. அப்போது, மாணவர்கள் யாரும் அங்கு இல்லாதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தேன்கனிக்கோட்டை வருவாய்துறை அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

The post இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர் appeared first on Dinakaran.

Related Stories: