ராகி போர்களை துவம்சம் செய்த யானைகள்

தேன்கனிக்கோட்டை, டிச.27: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம், சானமாவு வனப்பகுதி என நான்கு பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டு ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 20 யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ராகி பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், மரகட்டா கிராமத்திற்குள் புகுந்த 6 யானைகள், விவசாய நிலத்திற்குள் நுழைந்து அறுவடை செய்து கட்டுகளாக குவித்து வைத்திருந்த ராகி பயிர்களை துவம்சம் செய்து விட்டு ஓட்டம் பிடித்தன. நேற்று காலை வயலுக்கு சென்ற விவசாயிகள், யானைகளின் அட்டகாசத்தை கண்டு கண்ணீர் வடித்தனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை, ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராகி போர்களை துவம்சம் செய்த யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: