தர்காவில் உண்டியல் உடைத்து திருடிய 2வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி, டிச.27: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அண்ணா நகர் பகுதியில் தர்கா உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சிக்குரியா(35) என்பவர் தர்கா பொறுப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை எழுந்ததும், தொழுகைக்காக தர்கா பக்கமாக சென்றபோது உள்ளே இருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, தர்காவிற்குள் சென்று பார்த்தபோது, மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். மேலும், அங்குள்ள உண்டியலும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். தொடர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது தர்கா வளாகத்தில் 2 வாலிபர்கள் பதுங்கியிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிதிரெட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) மற்றும் சக்தி (22) என்பது தெரிய வந்தது. இருவரும் தர்கா மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். ₹1500 பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post தர்காவில் உண்டியல் உடைத்து திருடிய 2வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: