கிருஷ்ணகிரி, டிச.21: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே, நேற்று ரோந்து சென்றனர். அப்போது கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அதில், ₹1500 மதிப்பிலான இரண்டு யூனிட் உடை கற்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, லாரியின் உரிமையாளர், டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.