அரசு மகளிர் பள்ளியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி, டிச.25: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை வகித்து, மாணவிகளுக்கு நாட்டு நலப்பணித்திட்ட சீருடைகளை வழங்கி பேசினார். பள்ளி துணை ஆய்வாளர் சுதாகர், முகாம் குறித்து விளக்கி பேசினார். வரும் 30ம்தேதி வரை நடக்கும் முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்தோர் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு, சரிவிகித உணவு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, தூய்மை, குடிநீர், டிஜிட்டல் கல்வி அறிவியல் குறித்து பல்வேறு செயல் விளக்கங்களை அளிக்கவுள்ளனர்.

The post அரசு மகளிர் பள்ளியில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: