×

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகல்

டெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது சட்டத்துக்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி குழு பரிந்துரை பேரில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவில் சேர்க்காமல் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது.

The post தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகல் appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Sanjiv Khanna ,Delhi ,Sanjeev Khanna ,Supreme Court ,Chief Election Commissioner ,Dinakaran ,
× RELATED டெல்லி ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்