×

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது; 25 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது

புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் தொடங்கியது. ‘புரோபா-3’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்) ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டது. சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 4.08க்கு மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.

ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று பிற்பகல் 3.08 தொடங்கியது. இதனை முடித்து கொண்டு நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

The post பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது; 25 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,European Space Agency ,
× RELATED ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை...