நாமக்கல்: தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வெள்ளப் பகுதிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.