கொடைக்கானலில் சுற்றுலா பேருந்து மீது விழுந்த ராட்சத மரம்


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டத்துடன், மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வருகை வழக்கத்தைவிட குறைவாகவே காணப்படுகிறது. நேற்று அதிகாலையும் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை தொடர்ந்தது. இதற்கிடையே கரடிச்சோலை அருவி அருகே சாலையோரம் இருந்த ராட்சத மரம் திடீரென சரிந்து அப்பகுதியில் நின்றிருந்த சுற்றுலா பேருந்து மீது விழுந்தது. மேலும், அருகே இருந்த மின்கம்பம் மீதும் மரத்தின் ஒருபகுதி விழுந்தது. பேருந்தில் இருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் டிரைவர் உட்பட அனைவரும் அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்ததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது.

The post கொடைக்கானலில் சுற்றுலா பேருந்து மீது விழுந்த ராட்சத மரம் appeared first on Dinakaran.

Related Stories: