அதைத்தொடர்ந்து, காலை 6.27 மணியளவில் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர். விழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3ம் பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இரவு உற்சவம்: வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி நடக்கிறது. முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் வரும் 9ம் தேதியும், மகா தேரோட்டம் வரும் 10ம் தேதியும் நடைபெறும். நிறைவாக, வரும் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக, 4,500 கிலோ நெய், செப்பு கொப்பரை, 1,500 மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்படும். தீபத்திருவிழாவில், இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.