சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் நூலகங்களில் பணியாற்றி வரும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவித்தல் மற்றும் பாராட்டு விழா சென்ைன கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. 446 ஊரக நூலகர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்தும் சென்னை அண்ணா நூலகத்தில் நேற்று விழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகத்தின் மாநில தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தீனதயாளன் வரவேற்றார். விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றனர்.
தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘446 நூலகர்கள் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர். ஏறத்தாழ 2160 பேர் காலமுறை ஊதியத்துக்கு 2006ம் ஆண்டிலும், அதற்கு பிறகு 745 பேரும் வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் பலன் பெறவில்லை. எந்த துறையாக இருந்தாலும் நியாயமான கோரிக்கைகள் மீதான முக்கியத்துவத்தை உணர்ந்து, முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றுவோம்’’ என்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் ரூ69.2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகி இருக்கிறது. நூலகர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்’’ என்றார்.
விழாவில், பொது நூலகத்துறை இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார், நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் கு.தியாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வாழ்த்திப் பேசினர். முடிவில் தமிழ்நாடு அரசு ெபாது நூலகத்துறை பணியாளர் கழக பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.
The post பொது நூலகத்துறையில் பணிபுரியும் நூலகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி appeared first on Dinakaran.