ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக நவம்பர் 6ம் தேதி மட்டும் 3,35,189 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 27,50,030 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 599 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,208 பயணிகள், க்யூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 35,62,463 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20,42,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டண தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 83.61 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.