- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Oothangarai
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- வங்காள விரிகுடா
- ஃபெஞ்சல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஊத்தங்கரை
சென்னை: தமிழ்நாட்டில் 23 இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த மாதம் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, ஃபெஞ்சல் என்ற பெயருடன் வலுப்பெற்றுது. இதன்படி நேற்று முன்தினம் கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல், இரவு நேரத்தில் புதுச்சேரி-மாமல்லபுரத்துக்கு இடையே கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்தவகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் ஃபெஞ்சல் புயல் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்று புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் மழையை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத அளவு மழை பதிவானது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 23 இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கெடார் 42 செ.மீ., சூரப்பட்டு 38 செ.மீ., விழுப்புரம் நகரில் 35 செ.மீ. மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ., விழுப்புரம் முண்டியம்பாக்கம், கோலியனுர், திருப்பாலப்பந்தலில் தலா 32 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடம்பூண்டியில் 31செ.மீ., விழுப்புரம் மாவட்டம் முகையூர், வளவனூரில் தலா 30 செ.மீ. மழை பதிவானது.
The post தமிழ்நாட்டில் 23 இடங்களில் மிக மிக பலத்த மழை பதிவு.. அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.