×
Saravana Stores

வடமதுரை சாலை சந்திப்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வடமதுரை: வடமதுரை அருகே மூக்கரை பிள்ளையார் கோயில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வடமதுரை அருகே மூக்கரை பிள்ளையார் கோயில் திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலை சந்திப்பில் அதிகளவில் போக்குவரத்து உள்ளது. மேலும் இந்த சாலை சந்திப்பை ஏராளமான பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் சாலையை கடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் விபத்து நிகழ்ந்த பின்னர் ஒரு சில வாகனங்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் போலீசாருக்கு விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்வோரை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மற்றும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post வடமதுரை சாலை சந்திப்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nathamadurai Road ,VADAMADURAI ,MUKARAI PILLAIAR TEMPLE ,VADAMADURA ,Mukarai Pillaiyar Temple Dindigul- Trichy Four Highway Junction ,Vadmadurai ,Haimas ,North-Madurai Road ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் வழக்கறிஞர் மீது...