போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில், வடமாநில தொழிலாளர்கள் அரிவாள், கத்தி, கோடாரி, மண்வெட்டி மற்றும் கடப்பாரை உள்ளிட்ட பல்வேறு கருவிகளை தயாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்த தொழிலாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, அரிவாள், கோடாரி, மண்வெட்டி, வெட்டுகத்தி, கடப்பாரை, களைக்கொத்தி, கதிர்அரிவாள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
விலை குறைவாக இருப்பதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘இயந்திரங்களின் வருகை அதிகரித்த நிலையில், குறைந்த விலையில் விவசாய கருவிகளை குடும்பமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்,’ என்றனர்.
The post வேளாண் கருவிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் appeared first on Dinakaran.