- திமுக
- வேலை
- கிருஷ்ணகிரி மேற்கு
- மாவட்டம்
- பிரகாஷ் எம்.எல்.ஏ
- திமுக அவசர செயற்குழு
- மாவட்ட கவுன்சில்
- ஜனாதிபதி
- யுவராஜ்.…
- தின மலர்
ஓசூர், நவ.29: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று (29ம் தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் டிசம்பர் 5ம் தேதி, துணை முதல்வர் வருகை குறித்தும், கட்சி ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர், பகுதி அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பிஎல்ஏ 2 நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post திமுக அவசர செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.