காங்கயம் நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம்

காங்கயம், நவ.14: காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு, வழக்கறிஞர் சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருப்பூர் மெல்வின் கோன்ஸ் லைன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்தான கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.மாலதி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை தரணீசுரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு வழக்கறிஞர் வி.முருகேசன், வழக்கறிஞர் சங்க தலைவர் என்.கார்த்திகேயன், செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினர். இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, பொதுமருத்துவம் உள்பட பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என 150 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

The post காங்கயம் நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: