திருப்பூர், நவ.15: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இந்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரம் வருமாறுதிருப்பூர் குமரன் ரோடு 6 மி.மீ,குமார்நகரில் 6 மி.மீ,தெற்கு பகுதியில் 5 மி.மீ, கலெக்டர் அலுவலக பகுதியில் 3 மி.மீ, ஊத்துக்குளியில் 10.80 மி.மீ,மூலனுரில் 19 மி.மீ,நல்லதங்காள் ஓடை பகுதியில் 12 மி.மீ,காங்கேயம் பகுதியில் 5 மி.மீ, வெள்ளகோவிலில் 6 மி.மீ,திருமூர்த்தி அணைப்பகுதியில் 2 மி.மீ மடத்துக்குளத்தில் 5 மி.மீ என மாவட்டம் முழுவதும் 81.80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. இதன் சராசரி 4.9 மி.மீட்டர் ஆகும்.
The post திருப்பூர் மாவட்டத்தில் 81.80 மில்லி மீட்டர் மழைப்பதிவு appeared first on Dinakaran.