×
Saravana Stores

விபத்து ஏற்படுத்தும் வகையில் ஹைட்ராலிக் கதவு திறந்தபடி சென்ற மாநகர பேருந்து: இணையத்தில் வீடியோ வைரல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை செல்லும் தடம் எண்: 500 கொண்ட மாநகர பேருந்துகள் தினசரி அதிகாலை முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து என இயக்கப்படுகின்றன. இந்த, பேருந்துகளில் ஹைட்ராலிக் கதவுகள் பொறுத்தப்பட்டுள்ளது. இக்கதவை திறப்பதற்கு டிரைவரின் கண்ட்ரோலில் உள்ளது. அதனால், அந்த பேருந்து நிறுத்தம் வந்ததும் டிரைவரின் கண்ட்ரோலில் இருந்து படிக்கட்டு கதவுகள் திறக்கப்படும். பயணிகள் இறங்கி ஏறியவுடன் மீண்டும் டிரைவர் தனது கண்ட்ரோலில் இருந்து கதவை மூடிவிடுவார். அதன் அடிப்படையில், மாநகர பேருந்துகளுக்கு ஹட்ராலிக் கதவுகள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண்: 500 கொண்ட மாநகர பேருந்து சென்றது. அந்த பேருந்தில் ஹைட்ராலிக் கதவுகள் பழுதாகி கதவை மூட முடியாமல், கதவின் முழு பகுதியும் பேருந்தின் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதோடு பயணிக்கும் மாநகர பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், பின்னால் வரும் வாகனங்கள் பேருந்தை ஒட்டி வரும்போது கவனக்குறைவால் கதவில் மோதி, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சக வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

The post விபத்து ஏற்படுத்தும் வகையில் ஹைட்ராலிக் கதவு திறந்தபடி சென்ற மாநகர பேருந்து: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tambaram ,Dinakaran ,
× RELATED போனசாக வழங்கிய பணத்தை சம்பளத்தில்...