×
Saravana Stores

ரஷ்ய அரசு இந்தியாவில் ரூ.2000 கோடி வரை முதலீடு செய்வதாக கூறி ரூ.7.32 கோடி மோசடி செய்த நபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: ரஷ்ய அரசு இந்தியாவில் ரூ.2000 கோடி வரை முதலீடு செய்வதாக கூறி ரூ.7,32,45,000 மோசடி செய்தவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர், சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் கடந்த ஜீலை மாதம் ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்தோ-ரஷ்யன் பிசினஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அருண்ராஜ் மற்றும் பலர், தாங்கள் இந்தோ-ரஷ்ய வர்த்தக சபை பிரதிநிதி, ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்காக இந்தியாவில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது.

இதற்காக திருச்சியில் தான் நடத்தும் வியாபாரத் திட்டத்திற்கு ரூ.2000 கோடி வரை முதலீடு பெறலாம் என்று கூறியதை நம்பி கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை பல்வேறு தவணைகளாக நிறுவன வங்கி கணக்கிற்கு ரூ.7,32,45,000 வரை செலுத்தியுள்ளதாகவும், அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை பெற்றுக் கொண்டு, முதலீடுக்கான பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்து ஏமாற்றியுள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் சிவா இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கில் தொடர்புடைய மதன்குமார், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி தர்மன், ரூபா, விக்னேஸ்வரன், டாஸ்மாக் தாசில்தார் விஸ்வநாதன் ஆகியோரை கடந்த 12ம் தேதியும், சசிகுமார் என்பவரை கடந்த 14ம் தேதியும் கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அருண்ராஜ் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சிவா தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா அடங்கிய தனிப்படை போலீசார், தலைமறைவாக இந்த அருண்ராஜை தேடி வந்தனர். கடந்த 15ம் தேதி கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் தலைமறைவாக இருந்த அருண்ராஜ் (38) மற்றும் அவரது கூட்டாளிகள் குமரன் (43), நாகேந்திரன் (39) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் சோதனையின் போது தங்க நகைகள் 476 சவரன், வெள்ளி பொருட்கள் 400 கிலோ, பணம் ரூ.14.50 லட்சம், 11 சொகுசு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். சென்னை கமிஷனர்அருண் கூறும்ேபாது, ‘‘பொதுமக்கள் இதுபோன்ற மோசடி முதலீட்டாளர்களை நம்பி பணம் முதலீடு செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மூலமே கடன் பெற வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

The post ரஷ்ய அரசு இந்தியாவில் ரூ.2000 கோடி வரை முதலீடு செய்வதாக கூறி ரூ.7.32 கோடி மோசடி செய்த நபர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : government ,India ,Central Crime Police Action ,CHENNAI ,CENTRAL CRIME POLICE ,RUSSIAN ,Chennai Thi ,Chennai Police ,Commissioner ,Russian government ,Dinakaran ,
× RELATED இந்தியில் எல்ஐசி இணையதளம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்