சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, விமானத்தை பழுது பார்க்கும் பணி நடந்தது. ஆனால் நேற்று காலை 8 மணிக்கு மேல் ஆகியும், விமானத்தின் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் விமான நிலைய ஓய்வு அறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு, விமான நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இதனால் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வந்திருந்த 240 பயணிகளும் அவதி அடைந்தனர். அதேநேரத்தில் விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, விமானம் வானில் பறப்பதை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: விமானி சாதுர்யத்தால் 250 பேர் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.