×
Saravana Stores

தேவனாம்பட்டினம் மீனவர் குடியிருப்பு செல்லும் சாலையில் பள்ளம்

பேரிக்கார்டு அமைத்து போக்குவரத்துக்கு தடை

ரெட்டிச்சாவடி : கடலூர் வண்ணாரபாளையம் கே.கே.நகர் வழியாக தேவனாம்பட்டினம் மீனவர் குடியிருப்பு செல்லும் சாலையில் நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக திடீரென்று பள்ளம் ஏற்பட்டது இதன் காரணமாக அவ்வழியாகச் செல்லும் மாணவர்கள் சென்று வர மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சென்று பார்த்தபோது பாதாள சாக்கடை குழாய் உடைத்து சாலைக்கு அடியில் தண்ணீர் தேங்கி நின்றதால் பள்ளம் ஏற்பட்து தெரியவந்தது. பின்னர் இதை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அவ்வழியாக வாகனங்களுக்கு செல்லாத வகையில் பேரிக்கார்டுகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் தேவனாம்பட்டினம் செல்லக்கூடிய பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தேவனாம்பட்டினம் மீனவர் குடியிருப்பு செல்லும் சாலையில் பள்ளம் appeared first on Dinakaran.

Tags : Devanampattinam ,Reddychavadi ,Cuddalore Vannarapalayam KK Nagar ,
× RELATED ரெட்டிச்சாவடி அருகே பைக் மீது மினிலாரி மோதி 3 பேர் படுகாயம்