×
Saravana Stores

வாணியம்பாடி நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளருக்கு ₹10 ஆயிரம் அபராதம்

ஆணையாளர் எச்சரிக்கை

வாணியம்பாடி : வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் முஸ்தபா கூறியதாவது: வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இங்குள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகிறது.

மேலும், சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு காவல்துறை மூலம் வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

மேலும், கால்நடைகளை வேலூர் கோ சாலையில் ஒப்படைக்கப்படும். எனவே அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தவிர்க்க கால்நடைகளின் உரிமையாளர்கள் சாலை மற்றும் தெருக்களில் கால்நடைகளை விடாமல் சொந்த இடத்தில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் பராமரிக்குமாறு நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வாணியம்பாடி நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளருக்கு ₹10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi Municipality ,Commissioner ,Vaniyambadi ,Municipal Commissioner ,Mustafa ,Dinakaran ,
× RELATED டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...