×
Saravana Stores

உளுந்தை ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை வீடாக மாற்றி தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்: சமைத்து, துவைத்து, குடும்பம் நடத்தும் அவலம்

திருவள்ளூர்: உளுந்தை ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் வட மாநிலத்தவர்கள் தங்கி, சமைத்து சாப்பிட்டு வரும் அவலம் நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் ₹1.40 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் அது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அதே நேரத்தில் 526 ஊராட்சிகளில் பெரும்பாலான ஊராட்சிகளில் நூலகப் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இதேபோல், உளுந்தை நூலகத்திற்கும் பணியாளர் யாரும் நியமிக்கப்படாததால் பராமரிப்பின்றி உள்ளது.

இந்நிலையில் உளுந்தை ஊராட்சியில் இருளர் இன மக்களுக்காக தமிழக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உளுந்தை ஊராட்சியில் உள்ள நூலகத்தில் சுமார் 5 மாதங்களாக தங்கியுள்ளனர். மேலும் அங்கேயே சமைத்தும், துணி துவைத்தும், துவைத்த துணிகளை உளர வைத்தும், ஒரு வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் போன்று இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நூலகத்தில் பணியாளர் இல்லாதது மற்றும் வடமாநிலத்தவர்கள் தங்கி இருப்பதால் நூலகத்திற்கு ஒருவரும் வருவதில்லை. எனவே ₹1.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உளுந்தை ஊராட்சி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post உளுந்தை ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை வீடாக மாற்றி தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்: சமைத்து, துவைத்து, குடும்பம் நடத்தும் அவலம் appeared first on Dinakaran.

Tags : North State ,Ulundi Panchayat ,Thiruvallur ,Uluntha Panchayat ,Tiruvallur ,Uluntai Panchayat ,
× RELATED தீபாவளி விடுமுறைக்கு சென்ற வடமாநில...