×
Saravana Stores

2025ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேசிய நீர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சக நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் ஆக்கத் துறை 6வது தேதிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. நீர்வள மேலாண்மையில் சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த உள்ளாட்சி அமைப்புகள், சிறந்த பள்ளி, கல்லூரி, சிறந்த நிறுவனம், சிறந்த ஊராட்சி அமைப்பு, சிறந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த தொழிற்சாலை மற்றும் சிறந்த சமுதாய அமைப்புகள் ஆகிய ஒன்பது வகைகளின் கீழ் விருதுகள் இந்தியாவில் நீர்வள மேலாண்மையில் ஒரு முன்மாதிரியான கலாச்சாரத்தை உருவாக்குவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முறைகளை வெளிப்படுத்தும் நோக்குடன் 2018ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நீர் மேலாண்மையில் புதுமையான நடைமுறைகளை செயல்படுத்தும் அனைவரும் பங்கேற்கலாம். இதற்கான வழிகாட்டி முறைகளை பின்பற்றி டிசம்பர் 31ம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களை ராஷ்டிரிய புரஸ்கார் இணையத்தளமான (www.awards.gov.in) என்ற இணைய முகவரியில் அறிந்துகொள்ளலாம். இதில் நீர் பயனீட்டாளர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 2025ம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : National Water Awards 2025 ,Chennai ,Tamil Nadu government ,National Water Awards ,Secretary of ,Water ,Resources ,Manivasan ,Union Government Ministry of Water Resources, Rivers Development ,Ganga Rejuvenation Department ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சக நீர்...