- 16வது நிதி ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- சென்னை
- நிதி கமிஷன்
- அரவிந்த் பனகாரியா
- அமைச்சர்
- அஜய் நாராயண் ஜா
- அன்னி ஜார்ஜ்
- தின மலர்
சென்னை: பதினாறாவது நிதிக்கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகின்றனர். 18ம் தேதி முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். நிதிக் கமிஷன் உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாண்டி கோஷ், செயலாளர் ரித்விக் பாண்டே, இணைச் செயலாளர் ராகுல் ஜெயின் உட்பட 12 பேர் சிறப்பு விமானத்தில் நாளை பிற்பகல் சென்னை வருகின்றனர். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரெங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
இரவு 7.30 மணிக்கு ஐடிசி கிராண்ட் சோழா திரும்பும் குழுவினர் அங்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுடன், முதல்வர் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தை முடிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி காலை 9.30 மணிக்கு நிதிக் கமிஷன் குழுவினருடன், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். மாலை 5.30 மணிக்கு பேட்டி அளிக்கின்றனர். மறுநாள் 19ம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்டுகளை பார்வையிடுகின்றனர்.
இதையடுத்து சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் நிதி கமிஷன் குழுவினர் அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர். இரவு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். 20ம் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினர், பின்னர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பார்வையிடுகின்றனர். தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பார்வையிடுகின்றனர். பிறகு மதுரையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். 4 நாள் பயணமாக 16வது நிதிக்கமிஷன் குழுவினர் நாளை சென்னை வருவதை அடுத்து குழுவுடன் பயணிக்கும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
The post 16வது நிதி கமிஷன் தலைவர் தலைமையிலான குழு 4 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை: 18ம் தேதி முதல்வருடன் ஆலோசனை appeared first on Dinakaran.