×
Saravana Stores

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி: வரும் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய பொது பண்டக சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகள் கட்டிடம் கட்டுதல் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தண்ணீர்தொட்டி தெரு, வட சென்னை கூட்டுறவு பண்டக சாலை அமைந்திருந்த இடம் ஆகிய 2 இடங்களில் 1,471 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை 30ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே 200 மற்றும் 225 சதுர அடி பரப்பளவில் இருந்த குடியிருப்புகளை 400 சதுர அடியில் கட்டி கொடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி: வரும் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Minister ,PK Shekharbabu ,CHENNAI ,Tamil Nadu Urban Habitat Development Board ,CMDA ,Valdax Road, Water Tank Street ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்