ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: செயல்விளக்கத்திடல் அமைக்க இடுபொருட்கள்

திருவையாறு, நவ.15: திருவையாறு வட்டாரத்தில் தமிழக அரசு வேளாண்துறையின் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் பயிர் மேலாண்மை செயல் விளக்கத்திடல் அமைப்பதற்காக இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு வேளாண்துறையின் கீழ் இயங்கிவரும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2024-25-ன் கீழ் திருவையாறு வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களான உப்புக்காச்சிப்பேட்டை, ராயம்பேட்டை, வளப்பக்குடி, கண்டியூர், முகாசா கல்யாணபுரம், வரகூர், குழிமாத்தூர், கோனேரிராஜபுரம் ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்கத்திடல் அமைப்பதற்காக பயிர் மேலாண்மை இடு பொருட்களான சூடோமோனாஸ், உயிர் உரங்கள் மற்றும் நுண்சத்து ஆகிய இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

சூடோமோனாஸ் உயிரியல் காரணியை வயலில் இடுவதால் ஆரம்ப காலங்களில் வரும் நோய்களில் இருந்து பயிரினை காப்பாற்றலாம். உயிர் உரங்கள் காற்றில் உள்ள தழைச்சத்து மற்றும் மண்ணில் உள்ள பொட்டாஷ் மற்றும் துத்தநாக சத்தினை கரைத்து வழங்கும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 80 சதமும் இதர கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 20 சதமும் வழங்கப்படும். பயிர் மேலாண்ம இடுபொருட்கள் சூடோமோனாஸ் – 2.5 கிலோ , நுண்ணூட்டம்- 12.5 கிலோ, அசோஸ்பைரில்லம், துத்தநாகம் கரைக்கும் பாக்டீரியா ,பொட்டாஷ் கரைக்கும் பாக்டீரியா கலா அரை லிட்டர் ஆக மொத்தம் 1.5 லிட்டர் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் இந்த இடுபொருட்களை வாங்கி பயன்பெறுமாறு திருவையாறு வேளாண்மை உதவி இயக்குநர் லதா தெரிவித்துள்ளார்.

The post ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: செயல்விளக்கத்திடல் அமைக்க இடுபொருட்கள் appeared first on Dinakaran.

Related Stories: