×
Saravana Stores

50 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்

சேந்தமங்கலம், நவ.15: சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஓட்டல்கள், மளிகை கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா தலைமையில், துப்புரவு ஆய்வாளர் பால்ராஜ், மேற்பார்வையாளர் அழகுராஜா, பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், ராசிபுரம் மெயின் ரோடு, காந்திபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்தினால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். மொத்தம் 50 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ₹4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post 50 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Gutka ,Dinakaran ,
× RELATED நேரு பிறந்த நாள் விழா