×

தெப்பத் திருவிழாவுக்கு விடுமுறை கலெக்டருக்கு கோரிக்கை

திருச்செங்கோடு, நவ.13: திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு நகரை சுற்றியுள்ள பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் உள்ளிட்ட 15 ஊர்களில் மாரியம்மன் திருவிழா, வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தெப்ப தேர்த்திருவிழா திருச்செங்கோடு -ஈரோடு சாலையில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. திருச்செங்கோடு மட்டுமில்லாது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நிறையபேர் தெப்ப தேர்த்திருவிழாவை பார்ப்பதற்கு வருவார்கள். எனவே வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். தொடர்ந்து சனிக்கிழமை காலை கம்பம் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அந்த நாளிலும் குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

The post தெப்பத் திருவிழாவுக்கு விடுமுறை கலெக்டருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Thiruchengode National Thought Council ,President ,Thirunavukarasu ,Namakkal District Collector ,Uma ,Mariamman ,Periya ,Chinna Mariamman ,Akumumuthu Mariamman ,Dinakaran ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது