×

திமுக பாக முகவர்கள் கூட்டம்

ராசிபுரம்,நவ.13: ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூர் திமுக பாக முகவர்கள் (பிஎல்ஏ – 2) ஆய்வு கூட்டம், பேரூர் செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலசந்திரன். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பாக முகவர்கள் ஆற்றவேன்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞரணி துனை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகேஷ், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தீபன், மாணவரணி சூர்யா, மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

The post திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Rasipuram ,Union Philanallur District ,DMK Branch Agents ,District Secretary ,Subramaniam ,Union ,Jaganathan ,District Treasurer ,Balachandran ,Satyaseelan ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...