×

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், நவ.13: நாமக்கல்லில் 15ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமை நடக்கிறது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம். முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, டிப்பளமோ, டிகிரி, ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

The post தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,District Collector ,Uma ,Dinakaran ,
× RELATED இன்று அனுமன் ஜெயந்தி விழா; ஆஞ்சநேயர் கோயிலில் 500 போலீசார் பாதுகாப்பு