- தமிழ்நாடு அரசு
- காப்பீட்டுக்கு முந்தைய கண்டுபிடிப்பு மையம்
- திருச்செங்கோடு
- ஸ்டார்ட் அப்-TN
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு முன் காப்பீட்டு கண்டுபிடிப்பு மையம்
திருச்செங்கோடு, நவ.15: தமிழ்நாடு அரசு 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையில், ஸ்டார்ட் அப்-டிஎன் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து முன்மொழிவுகளை கேட்டிருந்தது. இதற்கான கல்லூரிகளில் ஒன்றாக, விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், ₹7.5 லட்சம் அரசு நிதியுதவியுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அனுமதி ஆணையை வழங்கினார். இந்த உத்தரவினை, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி இயக்குநர் பாலகுருநாதன் மற்றும் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த மையத்தைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் விஜயகுமார் மற்றும் பேராசிரியர்களை, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதி பாராட்டினார்.
The post தமிழ்நாடு அரசின் முன்காப்பீட்டு புத்தாக்க மையம் தொடங்க அனுமதி appeared first on Dinakaran.