பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று 57வது தேசிய நூலக வார விழா

பெரம்பலூர், நவ.14: பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழா, புத்தக கண்காட்சி தொடக்கவிழா பொதுமருத்துவ முகாம் ஆகியன இன்று நடைபெறுகிறது. பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் மற்றும் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும், 57வது தேசிய நூலக வாரவிழா, புத்தக கண்காட்சி தொடக்க விழா, பொது மருத்துவ முகாம் ஆகியன பெரம்ப லூர் புது பஸ்டாண்டின் தெற்கே உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்டத் தலைவர் அகவி தலைமை வகிக்கிறார். பெரம்பலூர் மாவட்ட நூலக அலுவலர் (பொ) முத்துக்குமரன் வர வேற்கிறார். பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட துணைத் தலைவர் தமிழ்குமரன், முன்னாள் வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் கோசிபா, பெரம்பலூர் தன்னம்பிக்கை பேச்சாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசுகின்றனர். பெரம்பலூர் ஊட்டி காஃபி பார் உரிமையாளரான அசூர் என். செல்லப்பிள்ளை கலந்து கொண்டு, புத்தகக் கண் காட்சி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையா ஆற்றுகிறார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். முடிவில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் சரஸ்வதி நன்றி தெரிவிக்கிறார்.

இந்த முகாமில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பொது மருத்துவ முகாமில் இலவசமாக பரிசோதித்து சிகிச்சை பெற்று பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட மைய நூலகஅலுவலர்(பொ) முத்துக்குமரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று 57வது தேசிய நூலக வார விழா appeared first on Dinakaran.

Related Stories: