பெரம்பலூர்,டிச.2: பெரம்பலூர் அருகே வயலில் புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்து முதியவர் இறந்தார். பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லப்பா மகன் வேணுகோபால்(73). இவரது மகன் நல்லுசாமி. இருவரும் வயல் காட்டில் மாட்டிற்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வேணு கோபாலை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. இதையறிந்த நல்லுசாமி தந்தையை கடித்த கட்டு விரியன் பாம்பை அடித்து கையில்எடுத்துக் கொண்டு, தந்தையுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, வேணுகோபாலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும், அவர் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக நல்லு சாமி அளித்த புகார் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெரம்பலூர் அருகே பாம்பு கடித்து முதியவர் பலி: வயலில் புல் அறுத்தபோது சோகம் appeared first on Dinakaran.