பெரம்பலூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியில் பைக் மோதல்: வாலிபர் பலி

பெரம்பலூர்,டிச.2: பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். சேலம் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலத் திற்கு டைல்ஸ் ஏற்றிக் கொண்டு லாரிஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஆத்தூர்- பெரம்பலூர் சாலையில், பெரம்பலூர் அருகே உள்ள கோனேரி பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டீசல் தீர்ந்து போன காரணத்தால் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டது. இந்த லாரியை ஒட்டி வந்த டிரைவரான அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகே உள்ள மனகெதி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வெங்க டேசன் (38) என்பவர் லாரிக்கு டீசல் வாங்க அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் மணிவேல்(48) என்பவர் அதிவேகமாக பெரம்பலூர் நோக்கிச் சென்றபோது, புயல் காரணமாக தொடர் மழை பெய்து கொண்டிருந்ததால், நிலை தடுமாறி, நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியுள்ளார். இந்த விபத்தில் மணி வேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியில் பைக் மோதல்: வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: