அரியலூர், டிச. 3: அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 305 மனுக்கள் வந்தன. அர்யலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமை வகித்தார். இதில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 305 மனுக்கள் வருகை appeared first on Dinakaran.