மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையிலானக் குழு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட அய்யன்குளம், நீடூர். சீர்காழியில் புதிய பேருந்து நிலையம்.
குறைக்காடு பகுதியில் பூண்டியாங்குப்பம் சட்டநாதபுரம்-தாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகள். திருவெண்காடு அருள்மிரு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில் திருப்பணி, பூம்புகார் சுற்றுலா வளாகம் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன் தலைமையிலான குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி , சட்டமன்ற உறுப்பினர் திருவாடானை கருமாணிக்கம் , வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், மாதவரம் சுதர்சனம் , ஆரணி சேவூர் ராமசந்திரன் , பூம்புகார் நிவேதா முருகன், மயிலாடுதுறை ராஜகுமார், சீரகாழி பன்னீர்செல்வம் , வேதாரண்யம் மணியன் , சங்கரன்கோவில் ராஜா , தருமபுரி வெங்கடேஷ்வரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை நகராட்சிகுட்பட்ட அய்யன்குளம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளதை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். மயிலாடுதுறை வட்டாரம் நீடூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.26லட்சத்து 500 மதிப்பிலான சுய உதவிக்குழு கடன்களை வழங்கினார்.
பின்னர், சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை ஒப்பந்தக்கால கெடுவிற்குள் நிறைவு செய்யுமாறு நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, குறைக்காடு பகுதியில் பூண்டியாங்குப்பம் சட்டநாதபுரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் 5.2565.63 கோடி மதிப்பீட்டில் 56.80 கி.மீ. சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
வளர்ச்சித்திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு காந்திராஜன் தெரிவித்ததாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒரு மாவட்டத்தின் வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுகிறதா என்பதை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது.
குறிப்பாக மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக கிடைக்கப்பெற அரசு அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தினந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
The post மயிலாடுதுறை மாவட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு appeared first on Dinakaran.