- ஜேசிபி
- திருவள்ளூர்
- மரகதம்
- நேரு தெரு, கொண்டஞ்சேரி புது காலனி
- கடம்பட்டூர் யூனியன்
- திருவள்ளூர்
- செல்வம் (எ) செல்வராஜ்
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொண்டஞ்சேரி புது காலனி, நேரு தெருவைச் சேர்ந்தவர் மரகதம் (35). இவரது கணவர் செல்வம் (எ) செல்வராஜ் கடந்த 10 ஆண்டுகளாக ஜேசிபி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12.45 மணியளவில் மப்பேடு சமத்துவபுரம் பகுதியில் செல்வம் ஜேசிபி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி இருக்கையிலேயே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வத்தின் மனைவி மரகதம் கொடுத்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஜேசிபி டிரைவர் மயங்கி விழுந்து சாவு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.