- அமைச்சர்
- நாசர்
- கலைஞர் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில்
- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
- யூனியன் கமிட்டி
- ஜனாதிபதி
- ஜெயசீலி ஜெயபாலன்
- கலெக்டர்
- டி. பிரபு சங்கர்
- பூந்தமல்லி…
திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.6.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் அனைவரையும் வரவேற்றார். கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், வட்டாட்சியர் வாசுதேவன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மு.பர்க்கத்துல்லா கான், ஊராட்சி ஒன்றிய ஆணையர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு நாசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஜெயசீலன், பிரேம் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர்கள் தென்னவன், இந்திரா பொன் குணசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், பூவண்ணன், வேலு, வேதவள்ளி சதீஷ்குமார், சரத்பாபு, ஹரி, சாந்தி தரணி, விமலாகுமார், சங்கீதா ராஜி, திலீப்ராஜ், நவமணி, சகீலா ரகுபதி உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.