×

திருக்குறள் வினாடிவினா போட்டியில் பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் சாதனை

திருவள்ளூர்: திருக்குறள் வினாடிவினா போட்டியில் பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 25ம் ஆண்டு நிறைவடைந்தது வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருவள்ளூர் பாரதிதாசன் நிறைநிலைப் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி சோ.அன்புமதி முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், மாணவன் ப.வருண் ஸ்ரீ சாஸ்தா 2ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களைப் பள்ளி தாளாளர் உமா சங்கர் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post திருக்குறள் வினாடிவினா போட்டியில் பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Bharathidasan School ,Thirukkural ,Thiruvallur ,Thiruvalluvar ,Kanyakumari ,Tamil Nadu Government Public Library Department… ,
× RELATED திருக்குறள் இசையை முடித்தார் இளையராஜா