×

ஆவடி காவல்படை பயிற்சி மையத்தில் மாணவர்களின் சைக்கிள் பேரணி

ஆவடி: ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஆவடியில் செயல்படும் மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையம் 57வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் மாவட்ட சைக்கிள் அசோஷியேஷன் மற்றும் டிவின் பிரதர்ஸ் சைக்கிள் ஸ்டோர் சார்பில் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஆவடி ரிசர்வ் காவல்ப்படை பயிற்சி மைய டி.ஐ.ஜி ராஜிவ்ராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் கேந்திர வித்தியாலயா பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சி மையத்தில் சுமார் 10 கிமீ பேரணி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சைக்கிள் பயிற்சியால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் சைக்கிள் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள வீரர்களை உருவாக்கும் விதமாக இந்த போட்டி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த பேரணியில் சிஆர்விஎப் பள்ளி முதல்வர் மாணிக்கச்சாமி, டிவின் பிரதர்ஸ் உரிமையாளர் பாலு பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஆவடி காவல்படை பயிற்சி மையத்தில் மாணவர்களின் சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Avadi ,Police Training Centre ,Avadi Central Reserve Police Training Centre ,Central Reserve Police Training Centre ,Thiruvallur District Cycle ,Bicycle Rally ,Avadi Police ,Training Centre ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட...