×
Saravana Stores

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட ராமதாஸ், டிடிவி வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட ராமதாஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: நாகை மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது இந்தியாவை சீண்டும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். அதைத் தடுக்க ஒன்றிய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மேலும் பருத்தித்துறை அருகே மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மீனவர்களை விடுவிக்க வலியுறுத்துகிறேன்.

 

The post இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட ராமதாஸ், டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,DTV ,Union Government ,Sri Lanka Navy ,Chennai ,TTV Dinakaran ,Sri Lankan Navy ,Bamaga ,Ramadas ,Sinhalese Navy ,India ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி: ராமதாஸ்