×

ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.8.38 கோடி ரொக்கம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த விவகாரத்தில் ஒபிஜி மற்றும் பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் 2 நாள் நடந்த சோதனையில் ₹8.38 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு ஒபிஜி பவர் அண்ட் இன்ப்ரா ஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் பி.விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனமும் சூரிய மின்சாரத்திற்கு தேவையான சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளுக்கு இயந்திரங்களை ஏற்றுமதி செய்ததில் பல கோடி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை ஒபிஜி பவர் அண்ட் இன்ப்ரா ஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் பி.விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பை, சென்னை, செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஆந்திரா உட்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 11ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சோதனை நடந்தது. சோதனையில் கணக்கில் வராத ₹8.38 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணங்கள் இல்லை. இதை பறிமுதல் செய்தனர்.

The post ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.8.38 கோடி ரொக்கம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : OBG ,B Wind Energy ,CHENNAI ,Enforcement Department ,OPG ,B.Wind Energy ,OBG Power ,Maharashtra ,P.Wind Energy Companies ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...