×
Saravana Stores

ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து போலீஸ் விசாரணை உரிய உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அட்வகேட் ஜெனரல், ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்த உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனை தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அதுசம்பந்தமான உத்தரவுகளை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யக் கூறிய நீதிபதிகள், கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் குறித்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து போலீஸ் விசாரணை உரிய உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,A. B. Suriya Prakasam ,Chennai High Court ,T. Krishna Kumar ,
× RELATED மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை...