×
Saravana Stores

தமிழகத்துக்கு நடப்பாண்டிற்கு தர வேண்டிய நீரை வழங்க வேண்டும்: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் உறுப்பினர் தலைமைப்பொறியாளர் தயாளகுமார் கலந்து கொண்டார். காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் சென்னையில் இருந்தும் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் ஜூன் 1ம் தேதி முதல் நவம்பர் 11 வரை உள்ள காலகட்டத்தில் மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளின் தற்போதைய நீர்வரத்து, நீர் இருப்பு ஆகிய விவரங்கள் மற்றும் இக்காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவில், உச்சநீதிமன்ற ஆணையின்படி தரவேண்டிய 148.413 டி.எம்.சி. அடி நீருக்கு பதிலாக 253.067 டி.எம்.சி. பெறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு மாற்றப்படும்.

2024-2025ம் ஆண்டின் வடகிழக்கு பருவ மழை அக்.16 முதல் நவ. 10 வரை உள்ள காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவின் கீழ் உள்ள காவிரி படுகையில் இயல்பைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது. அடுத்த 2 வாரங்களிலும் வடகிழக்கு பருவ மழையானது காவிரி படுகையில் இயல்பைவிட குறைவாகவே இருக்கும். இந்நிலையில் இவ்வாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கர்நாடகம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

The post தமிழகத்துக்கு நடப்பாண்டிற்கு தர வேண்டிய நீரை வழங்க வேண்டும்: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Cauvery water management ,CHENNAI ,Cauvery Water Management Committee ,Vineet Gupta ,Chief Engineer ,Dayalakumar ,Cauvery Technology Group ,Multi-State River Water Division ,Cauvery ,water ,regulation ,committee ,Dinakaran ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...