விமானத்தில் கோளாறு: மராட்டிய மாநிலம் சிக்லியில் இன்று நடைபெற இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் ரத்து!!

டெல்லி: மராட்டிய மாநிலம் சிக்லி என்ற இடத்தில் இன்று நடைபெற இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள வயநாடு மக்களவைத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, இன்று மகாராஷ்டிர தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச திட்டமிட்டிருந்தார். புல்தானா மாவட்டம் சிக்லியிலும், கோண்டியா மாவட்டம் கோபால்தாஸ் அகர்வாலிலும் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார்.

இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வரும் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புல்தனாவுக்கும். கோண்டியாவுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணம் ரத்தானது. சிக்லி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாததை அடுத்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்; நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இன்று சிக்கி வர திட்டமிட்டிருந்தேன்.

இந்த பயணத்தின்போது விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய பின், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் மேற்கொள்ள முடியவில்லை. மகாராஷ்டிர விவசாயிகள் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருவது எனக்கு தெரியும். பாஜக அரசு விவசாயிகளுக்கு சரியான விலையை தரவில்லை. இந்தியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும். உடனடியாக உங்கள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

The post விமானத்தில் கோளாறு: மராட்டிய மாநிலம் சிக்லியில் இன்று நடைபெற இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் ரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: