இந்திராகாந்தியே திரும்பி வந்தாலும் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது: அமித்ஷா பிரசாரம்

துலே: சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பி வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், துலேவில் நடந்த பாஜவின் தேர்தல் பிரசார பேரணியில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு முன் உலமாக்கள் காங்கிரஸ் தலைவரை சந்தித்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கான இடஒதுக்கீடு குறையும். ராகுல் பாபா, நீங்கள் அல்ல உங்களது நான்கு தலைமுறை வந்தாலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியருக்கு வழங்கமுடியாது. என்ன வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டுவர முடியாது. சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பினாலும் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுக்க முடியாது என்றார்.

The post இந்திராகாந்தியே திரும்பி வந்தாலும் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது: அமித்ஷா பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: