ராஞ்சி: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியது தொடர்பான பணமோசடி வழக்கில் அந்நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 3 பேர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த பெண்கள் ஊடுருவியது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது போலி ஆதார் அட்டைகள், போலி பாஸ்போர்ட், ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தை சேர்ந்த ரோனி மண்டல்,சமீர் சவுத்ரி மற்றும் இந்தியாவை சேர்ந்த பிந்து ஹல்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு உதவியதற்காக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post ஜார்க்கண்டில் வங்கதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.